மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய அபி டெய்லர் தொடரின்’ ஒளிபரப்பு தேதியை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்

தொகுப்பு | July 14, 2021, 12:00 AM IST

DIY body wash
Healthntrends
தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் அபி டெய்லரின் 3வது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இம்மாதம் 19-ந்தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவ்விருக்கும் இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமானா அசோக்கை இப்ரோமோவில் அறிமுகப்படுத்தியது கலர்ஸ் தமிழ்.

இந்த ப்ரோமோ திறமையான மற்றும் அழகான தோற்றமுடைய ஹீரோ அசோக்கை ஒரு கார்ப்பரேட் நிறுவன பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது. அங்கு அவருக்கும் அபிக்கும் இடையில் ஒரு மெல்லிய மோதல் உருவாகிறது. இது கதை ஓட்டத்தை விருவிருப்பாக்கப் போகிறது. இதுவரை அபி டெய்லர் சீரியலுக்கு 3 ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுகிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த சீரியலை வரும் 19-ந்தேதி ஒளிபரப்பப் போவதாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
19-ந்தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலை பார்க்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து ரசியுங்கள்.