இன்று முதல் அபி டெய்லர் புதிய நெடுந்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணிக்கு கலர்ஸ் தமிழில்

தொகுப்பு | July 19, 2021, 12:00 AM IST

DIY body wash
Healthntrends

தமிழ்நாட்டின் மிக இளைய பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நெடுந்தொடர் புதினம், அபி டெய்லர்  ன் ஒளிபரப்பு தொடங்கப்படவிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது.  சிறு நகர பின்புலத்தைக் கொண்ட அபி டெய்லர், அதன் சிறப்பான கதை நிகழ்வுகளின் சித்தரிப்பால் சிறிய அளவில் தொழில்நிறுவனத்தை தொடங்கி நடத்தும் பெண் தொழில்முனைவோர்களின் கதையையும், போராட்டங்களையும் உயிரோட்டமாக வழங்குகிறது.  2021 ஜுலை 19, திங்கள் முதல் ஆரம்பமாகின்ற இந்த புத்தம் புதிய நெடுந்தொடர், கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் ஒவ்வொரு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.  

ஒரு சிறு நகரத்தில் தையற்கலைஞராக (டெய்லர்) வாழ்க்கையை நடத்தும் துடிப்பான, இளம் பெண் அபிராமியின் (ரேஷ்மா முரளிதரனின் நடிப்பில்) கதையை சொல்கிறது அபி டெய்லர்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை சுந்தரமூர்த்தி (பிரபல நடிகர் / காமெடியன் படவா கோபி நடிப்பில்) மற்றும் கூடப்பிறந்த தங்கை ஆனந்தி (நடிகை ஜெயஸ்ரீன் நடிப்பில்) ஆகியோரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தன்மேல் கொண்டிருக்கின்ற அபியின் வாழ்க்கை, அவளது சிறிய கடையை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணுமாறு செய்வது மீதே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.  ஒரு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான அசோக் (மதன் பாண்டியன் நடிப்பில்), ஒரு தொழிலகத்தை இந்நகரில் நிறுவி, செயல்படத் தொடங்கிய சில காலத்திற்குள்ளேயே அபியுடன் நேருக்கு நேர் மோதலில் ஈடுபடுகிறார்.  அபி மற்றும் அசோக் இருவருக்கும் இடையே நிகழும் சுவாரஸ்யமான மோதலும், காதலும் இக்கதைக்களத்தை அதிக ரசனைக்குரியதாக ஆக்குகிறது.  

Healthntrends

இப்புதிய தொடர் தொடங்கப்படுவது குறித்துப் பேசிய கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், பெண்கள் சித்தரிக்கப்படும் வழிமுறையின் போக்குகளையே மாற்றுவதற்கு எமது அலைவரிசையின் நெடுந்தொடர் புதினங்கள் வழிவகுத்திருக்கின்றன.  மனதை தொடுகின்ற நிகழ்வுகளோடு நிஜமான, யதார்த்தமான, அழுத்தம் திருத்தமான கதைகளை இவற்றின் மூலம் நாங்கள் உயிர்ப்புள்ளதாக எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம்.  எங்களது வாக்குறுதியைப் பின்பற்றும் வகையில், தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய அளவுகோல்களை நிறுவுகின்ற மற்றுமொரு அற்புதமான நெடுந்தொடர் புதினத்தை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.  அனைத்து வீடுகளிலும் பேசப்படும் பெயராக அபி உருவெடுப்பாள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.  உலகமெங்கும் தமிழ் பேசும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை இந்நிகழ்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை,” என்று கூறினார்.

இத்தொடரின் இயக்குனர் பஷீர் மேலும் கூறியதாவது: அபி டெய்லர் என்பது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும்.  முன்னணி அலைவரிசையான கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு இதை ரசிகர்களுக்குப் படைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த அலைவரிசை, தொடங்கப்பட்டதிலிருந்தே புத்துணர்வூட்டுகின்ற யதார்த்தமான கண்ணோட்டத்தை வழங்கியதன் மூலம் பெண்களை மையமாகக் கொண்ட கதைகளின் சித்தரிப்பையே மாற்றியிருக்கிறது.  தைரியத்துடனும், திடமனதுடனும் ஒரு கார்ப்பரேட் நிறுவன பெருமுதலாளியை துணிவுடன் எதிர்கொள்கின்ற அபி என்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் பார்வையாளர்களும் இணைவது எனக்கு உற்சாகத்தை தருகிறது.  அபியும் மற்றும் அவளது கதையும் பல இளம் பெண் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.  இந்த கதாபாத்திரத்தோடு ஒரு சகோதரிபோல் இணைகின்ற உணர்வு அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் நான் கருதுகிறேன்.

2021 ஜுலை 19 திங்கள் அன்று ஆரம்பமாகின்ற அபி டெய்லர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க, ஒவ்வொரு திங்கள் முதல், சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள்.