இந்த வார சண்டே சினி காம்போவில், கேப்மாரி மற்றும் அரண்மனைக்கிளி

தொகுப்பு | June 20, 2021, 12:00 AM IST

DIY body wash
Healthntrends

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார சண்டே சினி காம்போவில் ஜெய் நடித்த கேப்மாரி மற்றும் ராஜ்கிரண் நடித்த அரண்மனைக்கிளி ஆகிய இரண்டு திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. இந்த திரைப்படங்கள் நாளை (20-ஆம் தேதி) மதியம் 1 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளன.

கேப்மாரி கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்த படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி உள்ளார். இதில் நடிகர் ஜெய், அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெய் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணராக நடித்துள்ளார். இதில் அவர் மதுவுக்கு அடிமையானவராக இருக்கிறார். இதன் காரணமாக 2 இளம் பெண்களான ஜெனி மற்றும் வர்ஷா ஆகியோருடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த முக்கோண காதலில் ஜெய் எப்படி சிக்கித் தவிக்கிறார் என்பதை இந்த படத்தில் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை யாகவும் இயக்குனர் எடுத்துள்ளார். உங்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு படமாக இது இருக்கும்.

Healthntrends

இதேபோல் அன்று ஒளிபரப்பாகும் மற்றொரு திரைப்படமான அரண்மனைக்கிளி திரைப்படம் கடந்த

1993-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இதை ராஜ்கிரண் இயக்கி நடித்துள்ளார். இதில் அஹானா மற்றும் காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை பெரிய பணக்கார வீட்டின் வேலைக்காரரான ராசய்யாவை சுற்றி வருகிறது. ராசய்யாவாக ராஜ்கிரண் நடித்துள்ளார். இந்த படத்தில் துரதிர்ஷ்டவசமாக விபச்சாரத்திற்கு தள்ளப்படும் ஒரு பெண்ணை அவர் காப்பாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து படம் விறுவிறுப்பாக செல்கிறது. இந்த படத்திற்கு சிறப்பான கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்துடன் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மேலும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. மதியம் 1 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள், இரண்டு திரைப்படங்களையும் பார்த்து ரசியுங்கள்.