தமிழும் சரஸ்வதியம் - புத்தம் புதிய மெகா தொடர்

தொகுப்பு | July 12, 2021, 12:00 AM IST

DIY body wash
Healthntrends

தனித்துவமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஸ்டார் விஜய் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது.  ஸ்டார் விஜய் சேனலில் ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன, அவை பிரதான நேர மற்றும் வார இறுதி நாட்களின் பார்வையாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.  பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி போன்ற தொடர்கள் முன்னணியில் உள்ள சில முக்கிய சீரியல்கள். மெகா-சீரியல்களின் வரிசையில், ஸ்டார் விஜய் மேலும்   சேர்க்கிறது.

தமிழும் சரஸ்வதியத்தின் கதை:

சரஸ்வதி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு ஆர்வமுள்ள பெண்.  ஆனால் அவள் எப்போதும் தான் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பை கூட முடிக்க முடியாமல் போனது குறித்து,  சரியாகப் படிக்காததற்காக தனது தந்தையிடமிருந்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களிலிருந்து தப்பிக்க அவள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.

தமிழ் என்ற  தமிசெல்வன் மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரியவன்.  தமிழ் தனது கல்வியை நிறுத்தி, சூழ்நிலைகளால் சிறிய வயதிலேயே குடும்பத் தொழிலை எடுத்துக் கொண்டவர் . அவர் படிக்காதவர் என்பதால் அவரது தாயார் கோதை அவருக்கு ஒரு படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். 

சரஸ்வததியாக நக்ஷத்ரா நடிக்கிறார்.  அவர் பல்வேறு சேனல்களுக்காக ஏராளமான சீரியல்களைச் செய்துள்ளார், மேலும் அவர் ‘ஆஸ்  ஐம் ஸபரிங் பிரம் காதல்’ (As I’m suffering from Kadhal) என்ற ஹாட்ஸ்டார் வலைத் தொடரில் இடம்பெற்றவர். 

தமிழாக தீபக். தீபக்  ஸ்டார் விஜய் சேனலின் செல்லப்பிள்ளைதான்.  மீண்டும் திரும்பியுள்ளார். ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக சேனலுடன் மிக நீண்ட கால உறவைக் கொண்டிருந்தார், முன்னணி சீரியல்களிலும் அவர் பல பாத்திரங்களைச் செய்துள்ளார்.

கோதை - மீரா கிருஷ்ணன் (தமிழின் தாய்), நடேசனாக ராமச்சந்திரன் (தமிழின்அப்பா), சொக்கலிங்கமாக பிரபு (சரஸ்வதியின் அப்பா), சந்திரலேகாவாக ரேகா (சரஸ்வதியின் அம்மா), வசுந்தராவாக தர்ஷனா, மேலும் பலர் நடித்துள்ளனர். 

தமிழும் சரஸ்வதியும் தொடரை இயக்கியுள்ளவர் எஸ். குமரன்.  தொலைக்காட்சி துறையின் மிகவும் பிரபலமான இயக்குனர்.  இந்த சீரியலை விகடன் விஸ்டா தயாரிக்கிறது.  ஸ்டார் விஜய்யில் ஜூலை 12, 2021 அன்று திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.  காணாதவறாதீர்கள்.