ஸ்டார் விஜய்யின் வார இறுதி சிறப்பு நிகழ்ச்சி சிங்கிள் பொண்ணுங்க

தொகுப்பு | July 11, 2021, 12:00 AM IST

DIY body wash
Healthntrends

வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கு உத்தரவாதம் அளிக்கிறது ஸ்டார் விஜய்  டிவி. எனவே ஒவ்வொரு வார இறுதியிலும் ஏராளமான புதுமையான சிறப்பு நிகழ்ச்சி காத்திருக்கிறது. வரும்  ஜூலை 11, ஞாயிற்றுக்கிழமை, ஒரு வேடிக்கையான பொழுதுபோக்கு நிகழ்ச்சி சிங்கிள் பொண்ணுங்க என்ற தலைப்பில் மூன்றரை மணி நேர சிறப்பு நிகழ்வாக ஒளிபரப்பாகிறது.

இந்த சிறப்பு நிகழ்வில், எட்டு திறமையான பெண்கள், அவர்களில் மிகவும் திறமையான மற்றும் தகுதியான சிங்கிள் பெண்ணை தேர்வுசெய்வர்.  இந்த நிகழ்வு வேடிக்கை மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கும்.  ஏனெனில் பெண்கள் தங்கள் தடைகள், வெற்றி மற்றும் தங்கள் வாழ்க்கையில் உள்ளவர்களைப்பற்றி  பகிர்ந்து கொள்கிறார்கள்.

Healthntrends

நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான பகுதிகள் உள்ளன, அதில் பெண்கள் தங்கள் இதயத்தில் உள்ளதை பேசவும் குறிப்பிட்ட போட்டிகளை வெல்லவும் தயாராகிறார்கள்.  ஒவ்வொரு பெண்ணும் தங்கள் சொந்த பாணியில் நடுவர்களை கவரும் விதம் முன்மொழிய வேண்டும், சிலர் வார்த்தைகளில் வெளிப்படுத்துவார், சிலர் நடனம் அல்லது நாடகம் போன்ற செயல்கள் செய்வர் .

வேடிக்கையான இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் மணிமேகலை. போட்டியாளர்கள் காவ்யா, ரித்திகா, ஜனனி அசோக் குமார், சுனிதா, திவ்யா கணேஷ், அர்ச்சனா வி.ஜே, ஸ்ரீனிதி, தர்ஷா, ஜாக்குலின். நடுவர்கள்  அருண், சாம் விஷால், தீனா, பாலா, சரவணன் பி.எஸ். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் ராமர், தங்கதுரை, வி.ஜே.விஜய்.

11 ஜூலை 2021, ஞாயிற்றுக்கிழமை 3PM  மணிக்கு STAR VIJAY இல் மட்டுமே இந்த சிறப்பு நிகழ்வைப் பார்க்கத் தவறாதீர்கள்.