வாக்கரூ அறிமுகம் செய்யும் புதிய கலெக்‌ஷன்

தொகுப்பு | July 8, 2021, 12:00 AM IST

DIY body wash
Healthntrends

இந்நாட்டின் முன்னணி காலனி பிராண்டான வாக்கரூ, வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கான அதன் புதிய காலணிகள் தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.  இத்தொகுப்பின் ஃபிளிப் பிளாப்புகள், ஹவாய் சாண்டல்கள் மற்றும் ஸ்லைடர்கள் ஆகியவை உள்ளடங்கும்.  நவீன ஃபேஷனை பிரதிபலிக்கும் இத்தயாரிப்புகள் ஸ்டைல் மற்றும் சௌகரியம் ஆகிய இரு அம்சங்கள் மீது சிறப்பு கவனம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன.  குஷன் கொண்ட EVA அல்லது சின்தடிக் லெதர் இன்லோல் மற்றும் மென்மையான ஸ்டிராப் லைனிங் போன்ற உயர்தர மூலப்பொருட்களைக் கொண்டு நிகரற்ற சௌகரியத்தை வழங்கும் வகையில் வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கான காலணிகளின் இத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.  மிகச்சிறந்த நெகிழ்வுத்திறன் மற்றும் சௌகரியத்தை வழங்கி, பாதங்களுக்கு அழுத்தம் இல்லாதவாறு பாதுகாப்பிற்காக உறுதியான ஃபுட்பெட் மற்றும் குதிகால் வளைவு ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டதாக ஃபிளிப் பிளாப்புகள், ஹவாய் சாண்டல்கள் மற்றும் ஸ்லைடர்கள் ஆகியவை இருக்கின்றன.

ஸ்லைடர்கள் - இந்த திடகாத்திரமான ஸ்லைடர்கள் எளிதில் காலில் மாட்டிக்கொள்ளும் வடிவமைப்புடன் பாதங்களில் சௌகரியமாகப் பொருந்துகின்றன. நாள் முழுவதும் இதனை வீட்டில் அணிந்திருந்தாலும் கூட பாதத்தை நிலையானதாக வைத்திருப்பதன் மூலம் நிகரற்ற சௌகரியத்தை இதன் குதிகால் வளைவு ஆதரவு வழங்குகிறது.  நெகிழ்வுத்திறனுள்ள ஃபிளாப்பை நேர்த்தியாகப் பொருந்துவதற்கு பாதத்தின் அகலத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக்கொள்ள முடிவும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். 

ஹவாய் - தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததான இந்த ஹவாய் ஸ்லிப்பர்கள், நல்ல பிடிமானத்தை தருகின்ற பல அடுக்குகள் கொண்ட ரப்பர்  சோல் மூலம் சௌகரியத்தையும், சிறப்பான பிடிமானத்திறனையும் வழங்குகிறது.  உயிரோட்டமான வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்லிப்பர்கள் நீடித்து உழைக்கின்ற ரப்பர் ஸ்டிராப்புடன் வருகின்றன.

ஃபிளிப் – ஃபிளாப்ஸ் : இந்த ஃபிளிப் – ஃபிளாப்புகள், மெல்லிய எடையுள்ள பல அடுக்குகள் கொண்ட EVA சோல் உடன் உருவாக்கப்பட்டிருப்பதால் உட்புற (வீட்டிற்குள்) பயன்பாட்டிற்கு மிகச்சிறந்த காலணியாக இவைகள் இருக்கின்றன.  இதன் டிரெண்டியான மூன்று வண்ண இன்சோல் இதற்கு ஸ்டைல் அம்சத்தை சேர்த்து வழங்குகிறது.  மென்மையான லைனிங் ஸ்டிராப் உடன் குஷன் கொண்ட இன்சோல், அற்புதமான சௌகரியத்தை நாள் முழுவதும் தருகிறது.  இந்த தயாரிப்புகளின் அணிவரிசை, உட்புற பயன்பாட்டிற்குப் பொருத்தமானவையாக, சௌகரியமானவையாக மற்றும் நவீன ஃபேஷனை பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.  ரூ.219 என்ற விலையில் தொடங்கும் இந்த காலணிகள் பல்வேறு வகையான ஸ்டைல், நிறம் மற்றும் மூலப்பொருட்களின் சிறப்பான கலவையாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது. இத்தொகுப்பைச் சேர்ந்த வாக்கரூ கேர்+, கூடுதல் சௌகரியத்திற்காக நல்ல குஷனுள்ள சோல் மற்றும் ஆதரவிற்கான ஸ்டிராப்களுடன் மெல்லிய எடையுள்ள காலணியாக தயாரிக்கப்பட்டுள்ளது.