இனிப்பான பாக்லவா ரெசிபி

தொகுப்பு | July 21, 2021, 12:36 PM IST

DIY body wash
Healthntrends

மிடில் ஈஸ்ட் ஸ்பெஷல் இனிப்பு இது. பாதாம், நெய் அல்லது வெண்ணெய் என்று கொஞ்சம் ரிச்சான ரெசிப்பி. பைலோ ஷீட்ஸ் எனப்படுபவை மாவால் செய்யப்படுவது. அது ரெடிமேடாகவும் கிடைக்கிறது. ப்ரெட் துண்டுகள், பிஸ்தா, பாதாம், நெய், சர்க்கரை, தண்ணீர், ரோஸ் வாட்டர் இவையெல்லாம் தேவையான பொருட்கள். இது கிட்டதட்ட பேக் செய்து எடுக்கப்படும் கேக் போன்றது. பைலோ ஷீட்டினை பேக்கிங் ட்ரேயில் விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது வெண்ணெய் அல்லது நெய் தடவ வேண்டும். உதிர்த்து வைத்த மில்க் ப்ரெட்டினை இதன் மீது பரப்பி, அதன்மீது பிஸ்தா, பாதாம் உடைத்தவற்றை லேயராக பரப்பிக் கொள்ள வேண்டும். மீண்டும் நான்கைந்து அடுக்குகள் வரும் வரை இதனை லேயர் லேயராக செய்ய வேண்டும். கடைசியாக வைக்கும் பைலோ ஷீட்டினை நன்கு அழுத்தி பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்விக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து, ஜில் தன்மை குறைந்ததும் பேக் செய்து எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சர்க்கரை சிரப் இன்னொரு பக்கம் தயார் செய்து கொள்ள வேண்டும். பேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட பாக்லவா மீது, சர்க்கரைப் பாகை தேன் போல ஊற்றி ஊறவைத்து பரிமாறினால் நாக்கு இதற்கு அடிமையாகிவிடும்.